PMK Candidate
PMK Candidate pt desk
தமிழ்நாடு

ஆரணி மக்களவைத் தொகுதி: விவசாய நிலத்தில் டிராக்டர் ஓட்டி வாக்கு சேகரித்த பாமக வேட்பாளர்

webteam

செய்தியாளர்: R.ஆஜாசெரிப்

வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், ஆரணி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக போட்டியிடும் பாமக வேட்பாளர் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

PMK Candidate

அதில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் கணேஷ் குமார், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வந்தவாசி மற்றும் அதனை சுற்றியுள்ள தென்னாங்கூர், சளுக்கை, பாதிரி வெங்குன்றம், அமையப்பட்டு, மும்முனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்களை நேரில் சந்தித்து வாக்குகளை சேகரித்தார்.

அப்போது, மும்முனி கிராமத்தில் வவசாய நிலத்தில் நாற்று நட்டுக் கொண்டிருந்த விவசாயிகளிடம் சேற்றில் இறங்கிச் சென்று மாம்பழம் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். பின்னர் உழவு ஓட்டுக் கொண்டிருந்த டிராக்டரில் ஏறி உழவு ஓட்டி தொண்டர்களை மகிழ்வித்து மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்நிகழ்வு அங்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.