ராமதாஸ் - அன்புமணி மோதல் புதிய தலைமுறை
தமிழ்நாடு

அன்புமணி Vs ராமதாஸ் : மேடையில் சண்டை.. வீட்டில் சமரசம்? முடிவுக்கு வருமா பாமக மோதல்?

நேற்று விழுப்புரத்தில் நடந்த பாமக பொதுக்குழுவில் தன் மகள் வழி பேரன் முகுந்தனை பாமக இளைஞரணி தலைவராக ராமதாஸ் அறிவித்ததற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்ததால், இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட்ட நிலையில், இன்று தைலாபுரம் வீட்டில் பேச்சுவார்த்தை நடந்தது.

ஜெனிட்டா ரோஸ்லின்

முன்னதாக நேற்று மேடையில் வைத்தே “குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பதவி கொடுக்கப்பட்டால் இது வாரிசு கட்சியாக மாறிவிடும். மட்டுமன்றி முகுந்தனுக்கு அனுபவம் இல்லை” என்று தெரிவித்திருந்தார் அன்புமணி.

இந்நிலையில், நேற்றிரவு தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை, முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் தலைமையான குழு சந்தித்து ஆலோசனை நடத்தியது. அதன்பின் சென்னை பனையூரில் உள்ள அன்புமணி ராமதாஸையும் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது, அன்புமணி தரப்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதனை ராமதாஸிடம் பாமக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேடையில் சண்டை - இல்லத்தில் சமரசம்?

இந்நிலையில், மேடையில் ராமதாஸ் உடன் வார்த்தை மோதலில் ஈடுபட்ட அன்புமணி, இன்று தைலாப்புரத்திலுள்ள பாமக நிறுவனர் ராமதாஸுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, யார் இளைஞரணி தலைவராக நியமிக்கப்படுவர் என்பது தெரியவருமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.