தமிழ்நாடு

முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு பிரதமர் வாழ்த்து

முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு பிரதமர் வாழ்த்து

Rasus

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பிரதமர் ‌நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி, முதலமைச்சரை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட பிரதமர் அவருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்தார். அதற்கு நன்றி கூறிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக மக்கள் சார்பில் பிரதமருக்கு மகரசங்கராந்தி வாழ்த்துகளை தெரிவித்தார்.

மேலும், அதிமுக நிறுவனத்தலைவர் எம்ஜிஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அவரின் உருவம் பொறித்த தபால் தலை வெளியிட அனுமதி வழங்கிய பிரதமருக்கு, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ‌நன்றி தெரிவித்தார்.