தமிழ்நாடு

25ம் தேதி புதுச்சேரி வருகிறார் பிரதமர்: அதிகாரிகள் இன்று ஆய்வு

25ம் தேதி புதுச்சேரி வருகிறார் பிரதமர்: அதிகாரிகள் இன்று ஆய்வு

Rasus

புதுச்சேரியில் பாரதிய ஜனதா சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிலையில் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

புதுச்சேரிக்கு 25-ம் தேதி வருகை தரும் பிரதமர் மோடி பல்வேறு அரசு விழாக்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதற்காக புதுச்சேரி விமான நிலையம் எதிரில் உள்ள திடலில் பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. 50,000 பேருக்கு மேலாக கலந்து கொள்ளும் வகையில் பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

ஆரோவில் அமைந்திருக்கும் விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதிகளில் விழுப்புரம் மாவட்ட போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். பொதுக்கூட்டம் நடைபெறும் புதுச்சேரி விமான நிலைய திடல் பகுதி புதுச்சேரி போலீசாரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. மேலும் திடல் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும், மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள். பிரதமரின் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.