தமிழ்நாடு

பிரதமர் மோடி எழுதிய கவிதை நூல் வெளியீடு

பிரதமர் மோடி எழுதிய கவிதை நூல் வெளியீடு

Rasus

பிரதமர் நரேந்திர மோடியின் கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

குஜராத்தி மொழியில் பிரதமர் மோடி எழுதியிருந்த கவிதை தொகுப்பு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. 'சிந்தனை களஞ்சியம்' என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள அந்த கவிதை நூலை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட, கவிஞர் வைரமுத்து பெற்றுக்கொண்டார்.

விழாவில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி ஒன்றும் முரட்டுத்தனமானவர் இல்லை என்றும் தேவையான நேரத்தில் சீர்த்திருத்தங்களை மேற்கொள்வார் எனவும் தெரிவித்தார். உழைப்பாளியான பிரதமரை பெற்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரதமர் மோடி தாய் மொழியில் கவிதை எழுதியிருப்பது மூலம் தாய் மொழியால் தான் கல்வி கற்கவேண்டும் என்பதை பிரதமரே வலுவாக உணர்த்துவதாக கவிஞர் வைரமுத்து குறிப்பிட்டார்.