குகேஷ் முகநூல்
தமிழ்நாடு

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று சரித்திரம் படைத்த குகேஷ்... குவியும் வாழ்த்துக்கள்!

இளம் வயதில் சதுரங்க உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்று சரித்திரம் படைத்துள்ள குகேஷூக்கு, வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

PT WEB

இளம் வயதில் சதுரங்க உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்று சரித்திரம் படைத்துள்ள குகேஷூக்கு, வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்று சரித்திரம் படைத்த குகேஷ்

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!

குகேஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, அவரது வெற்றி இந்தியாவை சதுரங்கத்தில் மாபெரும் சக்தியாக நிலை நிறுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி!

குகேஷின் வெற்றி வரலாற்று சிறப்பு மிக்கது என கூறியுள்ள பிரதமர் மோடி, “இந்த வெற்றி மூலம் குகேஷ் தனது பெயரை சதுரங்க வரலாற்றில் பொறித்துள்ளார். கோடிக்கணக்கான இளம் மனதுகளை அவர் பெரிய கனவுகளை காண தூண்டியுள்ளார். இது அவரது ஒப்பற்ற திறமை, கடின உழைப்பு மற்றும் தளாரத உறுதி மூலம் சாத்தியமாகியுள்ளது” என்றுள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

குகேஷால் தமிழ்நாடு பெருமையடைவதாக கூறியுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், குகேஷின் சாதனை, உலகின் சதுரங்க தலைநகர் சென்னை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

துணை முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் எலைட் வீரர்கள் திட்டத்தில், குகேஷ் இடம்பெற்றிருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி

“குகேஷின் வெற்றி, தமிழ்நாட்டின் மீது கவனத்தை குவித்துள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த குகேஷ் சதுரங்க உலக சாம்பியனாக மகுடம் சூடுவது பெருமைக்குரியது” எனக் குறிப்பிட்டுள்ளார் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

குகேஷ்

இதேபோல் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஆளுநர் ஆர்.என். ரவி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுக்கும், விளையாட்டு வீரர்களும் வெற்றி வாகை சூடிய குகேஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.