அண்ணாமலை
அண்ணாமலை கோப்புப்படம்
தமிழ்நாடு

"தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சக்தி எங்கள் யாத்திரைக்கு இருக்கு" - அண்ணாமலை பேச்சு

webteam

"திருக்குறள் அனைவரும் படிக்கக் கூடிய பொது நூலாக இருக்க வேண்டுமென்று பிரதமர் மோடி நினைக்கின்றார்.

திருக்குறள் நாம் மட்டும் படிக்கக் கூடிய நூலாக இருக்கக் கூடாது. உலகத்தில் உள்ள அனைவரும் படிக்கக் கூடிய பொது நூலாக இருக்க வேண்டுமென்று பிரதமர் மோடி நினைக்கின்றார். அதனால்தான் திருக்குறளை 100 மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளார். இதுவரை திருக்குறள் 23 மொழிகளிலே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

PM Modi

உலகத்தில் உள்ள எல்லா பிரச்னைகளுக்கும் திருக்குறளிலே தீர்வு இருக்கிறதென்று பிரதமர் மோடி சொல்லியிருக்கின்றார். இங்கே இருக்கின்றவர்கள் அதற்கு உரை எழுதியிருக்கின்றனர். ஆனால், அதை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை. அதனால்தான் என் மண் என் மக்கள் என்ற வேள்வி யாத்திரை நமக்குத் தேவைப்படுகிறது.

”எல்லோரும் கேட்கிறார்கள் மோடிஜியின் முகவரி என்வென்று..?”

மோடி என்ன செய்தார் என்ற புத்தகத்தை அமித்ஷா அவர்கள் வெளியிட இருக்கின்றார். அந்த புத்தகத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் நாம் எடுத்துச் செல்ல இருக்கின்றோம். அந்த புத்தகத்தில் எல்லாமே இருக்கு. இல்லாதது எதுவும் கிடையாது. எல்லோரும் கேட்கிறார்கள் மோடிஜியின் முகவரி என்வென்று. மோடிஜியின் முகவரி என்னவென்றால், அவரால் பயனடைந்துள்ள ஒவ்வொரு குடும்பத்தின் விலாசம்தான் மோடிஜியின் முகவரி. அதை அனைத்து இடத்திற்கும் நாம் எடுத்துச் செல்ல இருக்கின்றோம்.

Rahul Gandhi

”சனி, ஞாயிறு பிரதமர் ராகுல் காந்தி”

நம்முடைய கூட்டணியில் நிரந்தரமாக இருக்கக் கூடிய பிரதமர் இருக்கின்றார். ஆனால், I.N.D.I.A என்ற கூட்டணி ஒன்று இருக்கிறது. இந்த கூட்டணியில் திங்கட்கிழமை நிதிஷ்குமார் பிரதமர். செவ்வாய்க்கிழமை மம்தா பானர்ஜி, புதன்கிழமை கேசிஆர், வியாழக்கிழமை தாக்ரே, வெள்ளிக்கிழமை புதிதாக வருபவர் ஒருவர் என நாள்தோறும் ஒரு பிரதமர். நீங்கள் கேட்கலாம் ராகுல்காந்தி பெயரை ஏன் சொல்லவில்லை என்று. சனி, ஞாயிறு அவர்தான் பிரதமர். அப்போதுதான் கவர்மெண்ட் லீவ்.

இந்தியாவை தன்னுடைய மூச்சாக தன்னுடைய டிஎன்ஏ-வாக, தன்னுடைய கருவாக, ரத்தமாக, சதையாக, எலும்பாக, தன்னுடைய செல்லாக வைத்துக் கொண்டு 10 ஆண்டுகளாக வேலை செய்துக் கொண்டிருக்கும் பிரதமர் மோடி அவர்கள் மறுபடியும் 5 ஆண்டுகள் வரவேண்டும்.

தமிழக அரசியலை மாற்றக் கூடிய சக்தி இந்த யாத்திரைக்கு இருக்கிறது

பிரதமர் மோடி அவர்கள் டெல்லியிலே பேசும்போது, 3வது முறை பிரதமராக வந்து அமரும்போது உலகத்தின் 3வது பெரிய பொருளாதார நாடாகும் இந்தியா என்று சொன்னார்.

தமிழக அரசியலை மாற்றக் கூடிய சக்தி, இந்த யாத்திரைக்கு இருக்கிறது. இதை வெற்றி யாத்திரையாக மாற்றிக்காட்டிய நமது தேசிய ஜனநாயக கூட்டணிக்கட்சித் தலைவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.