பாரதிதாசன் பல்கலை பட்டமளிப்பு விழா
பாரதிதாசன் பல்கலை பட்டமளிப்பு விழா pt web
தமிழ்நாடு

PM MODI TRICHY VISIT | “எனது மாணவ குடும்பமே” பாரதிதாசன் பல்கலை பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி உரை

Angeshwar G

புதிய முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்

திருச்சி விமான நிலையத்தின் ரூ.1112 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய சர்வதேச முனையத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி அதை நாட்டுக்கு அர்ப்பணித்தார். புதிதாக கட்டப்பட்டுள்ள முனையத்தில் 750 கார்கள், 200 டாக்சிக்கள், 10 பேருந்துகளை நிறுத்தும் வசதி உள்ளது. 4 நட்சத்திர புள்ளிகள் பெற்ற முதல் இந்திய விமான நிலையம் இதுவாகும். இங்கு கழிவு நீரை வெளியேற்றாமல் மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் கலைநுட்பங்கள் உள்ளிட்டவையும் வடிவமைக்கப்பட்டுள்ளது,.

“எனது மாணவ குடும்பமே...” பாரதிதாசன் பல்கலையில்.. பிரதமர் மோடி உரை

தமிழ்நாட்டு கல்வி நிறுவனங்களே அதிகளவில் இருக்கும்.. 

விழாவில் பேசிய முதலமைச்சர், “இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்துவிளங்கும் மாநிலம் தமிழ்நாடு. கல்வியில் சிறந்த என்று எந்த பட்டியல் எடுத்தாலும் அதில் தமிழ்நாட்டு கல்வி நிறுவனங்களே அதிகமாக இருக்கும். நூறாண்டுகளுக்கு முன்னால் நீதிகட்சி போட்ட விதையின் காரணமாக இன்று கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக நாம் உள்ளோம்.

இன்னார் தான் படிக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி அனைவருக்கும் அனைத்துவிதமான வாய்ப்புகளையும் உருவாக்கி வருகிறோம். உயர்கல்வி மாணவர்களின் சிந்தனை, பெண்கல்வி போன்றவற்றை ஊக்குவிக்கும் பொருட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது” என தெரிவித்தார்.

தமிழக மக்கள் பிரதமரை சார்பில் வரவேற்கிறேன் - முதல்வர் ஸ்டாலின்

பட்டமளிப்பு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள், தமிழக மக்கள் சார்பில் உங்களை வரவேற்கிறேன்” என தெரிவித்தார்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38 ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க திருச்சி வந்தடைந்த பிரதமர் மோடி, பட்டமளிப்பு விழாவில் 1528 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி

புத்தாண்டின் முதல் நிகழ்ச்சியாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.