ஆசிரியை சுபாஸ்ரீ, மருத்துவ குணம் கொண்ட 500க்கும் அதிகமான மூலிகை செடிகளை வீட்டிலேயே வளர்த்து வருவதை பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு செடியின் தனித்துவத்தையும் அவர் எடுத்துரைத்து அரிய செயலை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் பாராட்டியுள்ளார்.
மேலும், புதுச்சேரி கடற்கரையில் தூய்மை பணி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ரம்யா என்ற பெண் குறித்தும் இன்றைய மனதின் குரலில் பேசப்பட்டது. இளைஞர்களை ஒருங்கிணைத்து ரம்யா மேற்கொண்டு வரும் பணியால் மாஹே பகுதி முழுவதுமே தூய்மையாக மாறியுள்ளதாக பாராட்டப்பட்டுள்ளது.
தாயின் பெயரில் ஒரு மரம் என்ற பரப்புரை அற்புதமான முன்னெடுப்பு என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற முழக்கம் இந்தியாவின் மூளைமுடுக்கெல்லாம் பல அதிசயங்களை நிகழ்த்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.