தமிழ்நாடு

'தாறுமாறாக திரியும் மக்னா யானை' - மயக்க ஊசி செலுத்த வனத்துறை திட்டம்

webteam

கும்கி யானை மீது அம்பாரி கட்டி அமர்ந்து, மக்னா யானை இருக்கும் வனப்பகுதிக்குள் சென்று மயக்க ஊசி செலுத்த முயற்சித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் Pஆ-2 மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணி 14 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. கடந்த 14 தினங்களாக வனத் துறையினர் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் கை கொடுக்கவில்லை. வனத் துறையினர் எதிர்பார்த்ததை விட மக்னா யானை வனப் பகுதிக்குள் வேகமாக நகர்ந்து செல்வதால் திட்டமிட்டது போல அதற்கு மயக்க ஊசி செலுத்துவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் யானையை பிடிக்கும் பணிக்காக கூடுதலாக ஆனைமலை புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் விஜயராகவன் கூடலூர் வந்துள்ளார். அவரோடு மொத்தம் 5 வன கால்நடை மருத்துவர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். மக்னா யானை பகல் நேரம் முழுவதும் வனப் பகுதிக்குள்ளையே சுற்றித் திரிவதால், அதன் வசிப்பிடத்தில் வைத்து அதற்கு மயக்க செலுத்திப் பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர்.

அதன்படி கும்கி யானை மீது அம்பாரி கட்டி, அதில் வன கால்நடை மருத்துவர்களை ஏற்றி மக்னா யானை இருக்கும் இடத்திற்குச் சென்று மயக்க ஊசி செலுத்துவதற்கான முயற்சிகளை வனத்துறை மேற்கொண்டுள்ளது. இந்த முயற்சி கைகொடுக்கும் என வனத் துறையினர் நம்புகின்றனர்.