தமிழ்நாடு

மறு கூட்டல்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

மறு கூட்டல்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

webteam

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள் மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

பிளஸ் டூ மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை 15ம் தேதி கல்வித்துறை இணையதளத்திலும், 17ம் தேதி அன்று பள்ளியிலும் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கல்வித்துறை இணையதளத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் பிறந்த தேதி, பதிவெண் ஆகியவற்றை அளித்து தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்ய முடியும்.
மறுகூட்டலுக்கு இன்று முதல் 15ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அதில் மொழி பாடங்களுக்கு 305 ரூபாயும், ஏனைய பாடங்களுக்கு 205 ரூபாயும் பள்ளியிலேயே பணமாக செலுத்த வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.