தமிழ்நாடு

அனுமதியின்றி ஏர் கலப்பை பேரணி: காங்கிரஸார் - போலீசார் தள்ளுமுள்ளு

அனுமதியின்றி ஏர் கலப்பை பேரணி: காங்கிரஸார் - போலீசார் தள்ளுமுள்ளு

webteam

அனுமதியின்றி காங்கிரஸ் கட்சியினர் பேரணி செல்ல முயன்றதாக போலீசார் தடுக்க முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கோவை, கருத்தம்பட்டியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் விவசாயிகள் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, ஜோதிமணி எம்.பி, தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய கே.எஸ்.அழகிரி “நாங்கள் அதிகமாகவும் கேட்க மாட்டோம். குறைவாகவும் பெறமாட்டோம். தேவையானதை பெறுவோம். காங்கிரஸ் புதிய பாதையில் பயணிக்கிறது. அதற்கு காரணம் ராகுல்காந்திதான். கடவுள் பக்தி உண்மை என்றால் வேல் இல்லாமல் முருகன் சிலையுடன் செல்ல வேண்டும். அப்படி சென்றால் நாங்களும் வருவோம்” எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் “பரஸ்பரம் புரிதல், கொள்கையை அடிப்படையாக கொண்டது எங்கள் கூட்டணி. மாற்றத்தை ஏற்படுத்த காங்கிரஸார் செயல்பட வேண்டும். ஜிஎஸ்டிக்கு பிறகு ஒவ்வொரு மாநிலத்தையும் மத்திய அரசு வஞ்சித்து வருகிறது.” எனத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் ஏர்கலப்பை பேரணி செல்ல முயன்றனர். இதில் கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டுராவ், ஜோதிமணி ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால் அனுமதியின்றி பேரணி செல்லக்கூடாது என போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.