இந்த பிரச்னைக்கு சுமூக முடிவு காணும் வகையில் எதிர்கட்சித்தலைவர் பேசிக்கொண்டிருக்கிறார். எதிர்கட்சித்தலைவர் பேசும்போது அடிக்கடி குறுக்கிடுவது சரியல்ல. அவரை பேச அனுமதியுங்கள்'' என்று துரைமுருகன் சட்டப்பேரவையில் பேசினார்.
நீட் தேர்வு விலக்கு தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக சிறப்பு சட்டப்பேரவைக்கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது அவை முன்னவர் துரைமுருகன் பேசுகையில், ''நீங்களா நாங்களா என பேசிக்கொண்டே போனால் பிரச்னை நீண்டு கொண்டே செல்லும். இப்போது நமக்கிருக்கும் பிரச்னை தமிழ்நாட்டுக்கு நீட் தேவையில்லை என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுவதற்காக அனைவரும் ஒன்றாக கூடியிருக்கிறோம். குற்றச்சாட்டுகளை பேசினால் தொடர்ந்து போய்கொண்டேயிருக்கும்'' என்றார்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி பேசுகையில், 'இந்த சட்டம் எந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்டது எல்லோருக்கும் தெரியும். இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை' என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வ பெருந்தகை பேச முயன்றார். இதனால் அவையில் சலசலப்பு ஏற்ப்பட்டது.
இதையடுத்து பேசிய துரைமுருகன், ''இந்த பிரச்னைக்கு சுமூக முடிவு காணும் வகையில் எதிர்கட்சித்தலைவர் பேசிக்கொண்டிருக்கிறார். எதிர்கட்சித்தலைவர் பேசும்போது அடிக்கடி குறுக்கிடுவது சரியல்ல. அவரை பேச அனுமதியுங்கள்'' என்றார்.