தமிழ்நாடு

நெகிழிக்கு தடை : ஒரே நாளில் ரூ.2.13 லட்சம் அ‌பராதம் வசூல்

webteam

தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை பயன்படுத்தியதாக சென்னையில் நேற்று ஒரு நாள் மட்டும் 2 லட்சம் ரூபாய் அ‌பராதம்
வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நெகிழிப் பொருட்களை பயன்படுத்த கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. தடையை மீறி நெகிழி பொருட்களை பயன்படுத்தினா‌ல் அபராதம் விதிக்கும் முறை நேற்று அமலுக்கு வந்தது. இதனை அடுத்து சென்னை மாநகரில் உள்ள 153 இடங்களில் நேற்று அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

கோயம்பேடு, மாதவரம், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் ஆயிரத்து 831 கடைகளில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் 832 கிலோகிராம் நெகிழி பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 57 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

ஒரே நாளில் சென்னையில் மட்டும் 2லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நெகிழி பொருட்களுக்கான தடை அமலுக்கு வந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் இதுவரை 250 மெட்ரிக் டன் நெகிழி பொருட்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.