தமிழ்நாடு

வட்டிப்பணம் தர தாமதித்ததால் செருப்படி - அவமானத்தால் தற்கொலை முயற்சி

வட்டிப்பணம் தர தாமதித்ததால் செருப்படி - அவமானத்தால் தற்கொலை முயற்சி

rajakannan

திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடியில் தண்டல் வட்டிப் பணம் தர தாமதப்படுத்தியதால் பேன்சி கடை உரிமையாளர் செருப்பால் அடித்து தாக்கப்பட்டதன் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அதனால் அவமானம் தாங்க முடியாமல் உரிமையாளர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

தானிப்பாடியைச் சேர்ந்த பூபாலன், பவுன்குமார் ஆகியோரிடம், பேன்சி கடை வைத்துள்ள ராஜேஷ் என்பவர் தண்டல் வட்டிக்கு கடன் பெற்றிருக்கிறார். கடந்த நான்கைந்து நாட்களாக தண்டல் பணம் கட்டவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால் பேன்சி கடை உரிமையாளர் ராஜேஷை, வட்டிக்கு கொடுத்தவர்கள் செருப்பால் அடித்துள்ளனர். 

இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தொடர்ந்து அவமானம் தாங்கமுடியாமல் விஷமருந்திய ராஜேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பூபாலன், பவுன்குமார் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசா‌ரணை நடத்தி வருகின்றனர்.