பெட்ரோல் விலை ஒரு மாத காலத்தில் லிட்டருக்கு 3 ரூபாய் 53 காசுகள் அதிகரித்துள்ளது. நேற்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் 96 ரூபாய் 8 காசுகளாக இருந்த நிலையில், இன்று 15 காசுகள் அதிகரித்து 96 ரூபாய் 23 காசுகளாக உள்ளது.
சந்தையின் ஏற்ற இறக்கத்தைப் பொறுத்து பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்கிற நடைமுறை அமலுக்கு வந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் முதல் தற்போது வரை பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. கடந்த மே மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலையில் 3.48 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதே போல் டீசல் விலையும் ஒரு மாதத்தில் 4 ரூபாய் 3 காசுகள் உயர்ந்து தற்போது லிட்டர் 90 ரூபாய் 38 காசுகளுக்கு விற்பனையாகிறது.