சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 97 ரூபாயை தாண்டியுள்ளது.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 25 காசுகள் அதிகரித்து ரூ.97.19 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சென்னையில் ஒரு லிட்டர் டீசலின் விலை 27 காசுகள் அதிகரித்து ரூ.91.42 விற்பனை செய்யப்படுகிறது.
முன்னதாக, சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெட்ரோல், டீசல் விலை எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை கடந்துள்ளது. அந்த வகையில் தமிழகத்திலும், பெட்ரோல் விலை லிட்டருக்கு நூறு ரூபாயை நெருங்கி வருகிறது.
பெட்ரோல், விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து வரும் காங்கிரஸ் கட்சி இன்று நாடு தழுவிய அளவில் அடையாள ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்க் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.