புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், விலை உயர்வு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை பெட்ரோலுக்கு 2.44 விழுக்காடும், டீசலுக்கு 2.57 விழுக்காடும் உயர்த்துவதற்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அனுமதி அளித்தார்.
அதன்படி, ஜனவரி ஒன்று முதல் புதுச்சேரியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 96 ரூபாய் 26 காசுக்கும், டீசல் 86 ரூபாய் 48 காசுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.