தமிழ்நாடு

கோவையில் பாஜக அலுவலகம் மீது குண்டு வீச்சு!

கோவையில் பாஜக அலுவலகம் மீது குண்டு வீச்சு!

webteam

கோவை சித்தாபுதூரில் உள்ள பாரதீய ஜனதா கட்சி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

கோவை சித்தாபுதூரில் உள்ள பாரதீய ஜனதா கட்சி அலுவலகம் உள்ளது. இங்கு இன்று அதிகாலை 4 மணிக்கு ஒரு ஆட்டோவில் நான்கு பேர் வந்தனர். பாஜக அலுவகத்தில் இருந்து 50 அடிக்கு முன்பே வாகனத்தை நிறுத்திவிட்டு நடந்து வந்த அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த 2 பெட்ரோல் குண்டுகளை பாஜக அலுவலகத்தின் மீது வீசிவிட்டு தப்பினர். இந்தக் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

பெரியார் சிலை பற்றி பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் வலுத்துள்ளன. இந்தச் சூழலில் பாரதீய ஜனதா கட்சி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.