தமிழ்நாடு

தூத்துக்குடியில் பெட்ரோல் குண்டுவீச்சு - மீண்டும் பதட்டம்

தூத்துக்குடியில் பெட்ரோல் குண்டுவீச்சு - மீண்டும் பதட்டம்

rajakannan

தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அண்ணாநகர் 6வது தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரை நோக்கி இளைஞர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். 

தூத்துக்குடி அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று பிற்பகல் காவலர்கள் மக்களிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஆயுதம் ஏந்திய காவலர்கள் மற்றும் ஆயுதம் ஏந்திய மக்கள் மோதத் தொடங்கினர். இதனால் அப்பகுதியே கலவர பூமியாக காட்சியளித்தது. போராட்டக்காரர்களின் கல்வீச்சில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி உள்ளிட்ட 10 காவலர்கள் காயமடைந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 5 பேர் காயமடைந்த நிலையில், காளியப்பன் (22) என்ற இளைஞர் உயிரிழந்தார். இதனால் துப்பாக்கிச்சூட்டினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

இதனையடுத்து,  தற்போது அண்ணாநகர் 6வது தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரை நோக்கி இளைஞர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். பெட்ரோல் குண்டும் வீசப்பட்டது. போலீசாரை உள்ளே விடாமல் இளைஞர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் குண்டு வீச்சை அடுத்து அண்ணாநகர் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.