அதிமுக நிர்வாகி ஒருவரின் வீட்டின் மீது இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் 38-வது வார்டின் கவுன்சிலராக இருந்த இக்பால், இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்த நிகழ்வில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொள்வதால், அதற்கான வரவேற்பு பதாகைகளை இக்பால் அமைந்திருந்தார். இந்நிலையில், நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் அந்த பதாகைகளைக் கிழித்தெறிந்தாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, இன்று காலை இக்பாலின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பெட்ரோல் குண்டு வெடிக்காததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.