தமிழ்நாடு

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு

JustinDurai
சென்னையில் பெட்ரோல் டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது.
ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 30 காசு அதிகரித்து 105 ரூபாய் 43 காசாக உயர்ந்துள்ளது. டீசல் விலையும் லிட்டருக்கு 34 காசு அதிகரித்து 101 ரூபாய் 59 ஆக விற்பனையாகிறது. இதற்கிடையே சற்று ஆறுதல் தரும் செய்தியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 2 வாரங்களில் இல்லாத அளவு குறைந்து பீப்பாய்க்கு 82 டாலராக உள்ளது. ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் வினியோகம் தொடங்கும் அறிகுறி ஏற்பட்டுள்ளதாலும் அமெரிக்காவின் கச்சா எண்ணெய் கையிருப்பும் விலை குறைவுக்கு காரணமாக கூறப்படுகிறது.
இவ்விலை குறைவு தொடரும் பட்சத்தில் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளது. இதற்கிடையே கச்சா எண்ணெய் விலையை குறைப்பதற்காக சவுதி அரேபியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டுள்ளது.