பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிள் ஓட்டி தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பிரேமலதா விஜயகாந்த், சைக்கிள் ஓட்டி, தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
மத்திய, மாநில அரசுகளின் கடமை விலைவாசிகளை குறைப்பது, ஆனால், மக்கள் மீது வரிகளை திணிப்பதாக பிரேமலதா குற்றம்சாட்டினார். மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம் முன்பு தேமுதிகவினர் மாட்டுவண்டியில் பயணம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை, கடலூர் உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தேமுதிகவினர், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.