மதுக்கடையை அகற்றக் கோரி நடைபெற்ற போராட்டத்தின் போது செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஐஜியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் சந்திப்பில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் கடை மூடப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தும், போராட்டம் கைவிடப்படாததால் போலீசார் தடியடி நடத்தினர். பெண்கள் மீதும் தடியடி நடந்தது. இந்த சம்பவத்தின் போது செய்தியாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
எனவே செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவைs மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பாரியிடம் செய்தியாளர்கள் புகார் மனு அளித்தனர். விசாரணைக்குப் பிறகு இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஐஜி பாரி தெரிவித்துள்ளார்.