தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற வழக்கறிஞரான சபரீஸ் தாக்கல் செய்துள்ள மனுவில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், “சம்பந்தப்பட்ட போலீசாரே விசாரணை மேற்கொண்டால் ஆதாரங்கள் அழிக்கப்பட வாய்ப்புள்ளது. அரசின் ஆய்வில் உண்மை வெளிவராது” என்று அவர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.