தமிழ்நாடு

குட்கா வழக்கில் சிபிஐ விசாரணை தொடருமா..? உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

குட்கா வழக்கில் சிபிஐ விசாரணை தொடருமா..? உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

Rasus

குட்கா ஊழல் புகாரை சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது.

தமிழக அரசியலில் புயலைக் கிளப்பிய குட்கா ஊழல் வழக்கை லஞ்ச ஒழிப்புத் துறையிடம் இருந்து சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. எனவே அதுதொடர்பான விசாரணையை சிபிஐ தொடங்கியது.

இதனிடையே குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க தடை விதிக்கக்கோரி இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை அளிக்கவுள்ளது.