தமிழ்நாடு

ரஜினி ரசிகர்கள் கிடா வெட்ட பீட்டா எதிர்ப்பு

ரஜினி ரசிகர்கள் கிடா வெட்ட பீட்டா எதிர்ப்பு

rajakannan

ரஜினிகாந்த் ரசிகர்கள் கிடா வெட்டி விருந்து வைப்பதற்கு பீட்டா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் 31-ம் தேதி ரசிகர்கள் மத்தியில் தனது அரசியல் பிரவேசத்தை ரஜினி அறிவித்தார். மதுரை, சேலம் ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி, “உங்களுக்கு கிடா வெட்டி விருந்து வைக்க வேண்டும் என ஆசைதான். ஆனால் ராகவேந்திரா மண்டபம் சைவம் என்பதால் வேறொரு இடத்தில் விருந்து வைக்கிறேன்” என்றார்.

ரஜினியின் ஆசையை நிறைவேற்றும் வகையில், மதுரை மாவட்டம் ரசிகர் மன்றம் சார்பில் ஜனவரி 7ம் தேதி மதுரை அழகர் கோயிலில் ரசிகர்களுக்கு கிடா விருந்து அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்ததை கொண்டாடும் வகையில் இந்த விருந்து வைக்கப்படுவதாக கூறப்பட்டது.

இதனிடையே, கிடா வெட்டி விருந்து வைப்பதை தடுத்து நிறுத்தும் வகையில் ரஜினிகாந்திற்கு பீட்டா அமைப்பு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது. அதில், கோயிலில் கிடா விருந்து வைப்பது சட்டப்படி குற்றம் என்பதால் ரஜினி ரசிகர்கள் கிடா வெட்டுவதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதனையடுத்து, மதுரை அழகர் கோயிலில் கிடா பலி இல்லை, ஆனால் சைவ விருந்து உண்டு என அம்மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.