தமிழ்நாடு

தமிழகத்தில் இன்றும் நாளையும் கடைகளுக்கு அனுமதி

தமிழகத்தில் இன்றும் நாளையும் கடைகளுக்கு அனுமதி

Sinekadhara

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட இருப்பதால் இன்றும் நாளையும் மட்டும் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில், இன்றும் நாளையும் மட்டும் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, இன்று இரவு 9 மணி வரையும் கடைகள் திறந்திருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், நாளை ஒருநாள் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளையும் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அதேபோல், வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி இன்றும், நாளையும் தனியார் மற்றும் சிறப்பு பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.