தமிழ்நாடு

கடும் கட்டுப்பாடுகளுடன் நீட் தேர்வெழுத அனுமதி: மாணவியின் கொலுசை வெட்டி எடுத்த அவலம்!

கடும் கட்டுப்பாடுகளுடன் நீட் தேர்வெழுத அனுமதி: மாணவியின் கொலுசை வெட்டி எடுத்த அவலம்!

kaleelrahman

ஈரோட்டில் நீட் தேர்வெழுத கடைசி நேரத்தில் வந்த மாணவியின் கொலுசை கட்டிங் பிளேயரால் கழட்டிய பிறகே அனுமதிக்கப்பட்டார்.

ஈரோடு மாவட்டத்தில் 7 மையங்களில் 4896 பேர் நீட் தேர்வெழுத ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், சென்னிமலை சாலையில் உள்ள மையத்தில் தேர்வெழுத வந்தவர்களை தீவிர சோதனைக்கு பிறகே அனுமதித்தனர். இந்நிலையில், கடைசி நேரத்தில் தேர்வெழுத வந்த சில மாணவியின்  கொலுசுகளை கழற்றுவதில் சிரமம் ஏற்பட்டது.

இதனையடுத்து காவலாளிகள் கட்டிங் பிளேயர் கருவியைக் கொண்டு கொலுசை கழட்டிய பிறகே அனுமதிக்கப்பட்டனர். உடல் வெப்பநிலை பரிசோதனை செய்தும் தலைமுடியை சரிசெய்த பிறகு அனுமதித்தனர். இதனால் கடைசி நேரத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.