தமிழ்நாடு

அனைத்து நீதிமன்றங்களிலும் பிப்.7 முதல் நேரடி விசாரணைக்கு அனுமதி

Sinekadhara

சென்னை உயர் நீதிமன்றம் உட்பட அனைத்து நீதிமன்றங்களிலும் நேரடி விசாரணைக்கு அனுமதி அளிக்கப்படுவதாக தலைமை பதிவாளர் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம், மதுரைக்கிளை மற்றும் கீழமை நீதிமன்றங்களில் பிப்ரவரி 7 முதல் நேரடி விசாரணை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரடி, காணொலிமூலம் விசாரணை நடைபெறும் என தலைமை பதிவாளர் அறிவித்திருக்கிறார்.

வழக்கறிஞர்கள், நேரில் ஆஜராகி வாதிடும் மனுதாரர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் எனவும், வழக்கறிஞரகள் சங்கம், வழக்கறிஞர் அறைகள் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு செயல்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் உணவகம், நூலகம் ஆகியவை திறக்க அனுமதியில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.