தமிழ்நாடு

பெரியார் சிலை சேதம்: ஹெச்.ராஜா சொன்னது நிகழ்ந்தது!

webteam

திருப்பத்தூரில் பெரியார் சிலையை சேதப்படுத்திய விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

திரிபுராவில் பெலோனியா என்ற இடத்தில் இடதுசாரி புரட்சியாளர் லெனின் உருவச்சிலை புல்டோசர் உதவியுடன் இடித்துத் தள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, “ லெனின் யார்? அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு. கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு. இன்று திரிபூராவில் லெனின் சிலை.. நாளை தமிழகத்தில் ஈ.வெ.ராமசாமி சிலை” எனப் பதிவிட்டிருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்ப, தமிழகத்தின் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் திருப்பத்தூர் தாலுகா அலுவலம் முன் இருந்த பெரியார் சிலையை சிலர் சேதப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக திருப்பத்தூர் பாஜக நகரச் செயலாளர் முத்துராமன், பிரான்சிஸ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்யுள்ளனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.