தமிழ்நாடு

காஞ்சிபுரம் அருகே பெரியார் சிலை உடைப்பு - போலீசார் விசாரணை

காஞ்சிபுரம் அருகே பெரியார் சிலை உடைப்பு - போலீசார் விசாரணை

webteam

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே பெரியார் சிலையின் கண்ணாடி மற்றும் கை உடைக்கப்பட்ட சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

துக்ளக் விழாவின் ஆண்டு விழாவில் ரஜினி பேசிய பெரியார் குறித்த கருத்து பெரும் சர்ச்சையாகியுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் ரஜினி தான் கூறிய கருத்தில் இருந்து பின் வாங்கப்போவதில்லை எனவும் மன்னிப்பும் கேட்க மாட்டேன் எனவும் தெரிவித்து விட்டார்.

இதனால் அதிமுக அமைச்சர்களும் திமுக தலைவர்களும் ரஜினி குறித்து பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஆனால் பாஜகவினர் ரஜினியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் சாலைவாக்கம் அருகே பெரியார் சிலையின் மூக்கு, கை பகுதிகள் உடைக்கப்பட்டதால் பதட்டம் நிலவுகிறது. பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.