பெரியார் சிலையை அவமதிக்க முயற்சித்திருப்போரை, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் சென்னை அண்ணா சாலையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெரியார் சிலையை அவமானப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு, தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்க சிலர் செயல்படுகிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ள ஸ்டாலின், தமிழகத்தில் நிலவும் ஒற்றுமை உணர்வையும், சமூக நீதிக் கொள்கையையும் தகர்க்க திட்டமிடுபவர்களை ஒடுக்க வேண்டியது அவசியம் எனக் கூறியுள்ளார். இது பெரியார் மண் என்பதை ஆள்பவர்களும் அறிவார்கள் என்பதால், தந்தை பெரியார் சிலையை அவமானப்படுத்த முயற்சித்தவர்களை, தேசிய
பாதுகாப்புச் சட்டத்தில் அடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.