தமிழ்நாடு

பேரறிவாளன் பரோல் நீட்டிப்பு?

பேரறிவாளன் பரோல் நீட்டிப்பு?

Rasus

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள பரோல் மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டட பேரறிவாளன், ஒரு மாத பரோலில் கடந்த மாதம் 24-ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் தங்கியுள்ள பேரறிவாளனை, பல அரசியல் கட்சித் தலைவர்களும் நண்பர்களும் உறவினர்களும் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். அவரின் 1 மாத கால பரோல் நாளையுடன் முடிவடையும் நிலையில் மேலும் ஒரு மாத காலத்திற்கு பேரறிவாளனின் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. பரோல் நீட்டிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் அவரது தாயார் அற்புதம்மாள் ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தார். இதுதவிர, பேரறிவாளனை ஒட்டுமொத்தமாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் பல அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.