தமிழ்நாடு

பேரறிவாளன் பரோல் இன்றுடன் முடிகிறது: பரோலை நீட்டிக்க கோரிக்கை

பேரறிவாளன் பரோல் இன்றுடன் முடிகிறது: பரோலை நீட்டிக்க கோரிக்கை

webteam

முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான பேரறிவாளனின் பரோல் இன்றுடன் முடிவடைகிறது.

ராஜூவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் தந்தைக்கு உடல் நலக்குறைவு என்பதால், ஆகஸ்ட் 24ஆம் தேதிவரை பரோல் வழங்கப்பட்டது. பின்னர் அவரது தாயாரின் வேண்டுகோளை ஏற்று மேலும் ஒரு மாத காலம் பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டது. அவ்வாறு நீட்டிப்பு செய்யப்பட்ட பேரறிவாளனின் பரோல் காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பரோலை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் பேரறிவாளனுக்கு நிரந்த விடுதலை வழங்குமாறு, அவரது தாய் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.