தமிழ்நாடு

பேரறிவாளனுக்கு பரோல்: தமிழக அரசு உத்தரவு

பேரறிவாளனுக்கு பரோல்: தமிழக அரசு உத்தரவு

webteam

ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளனை பரோலில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் 26 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனை விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையை பிறப்பித்து வேலூர் சிறைச்சாலைக்கு அனுப்பியது தமிழக அரசு. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையைக் காண பரோல் கோரியிருந்தார் பேரறிவாளன்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. பேரறிவாளனின் தாயாரின் கோரிக்கை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் ஆணை சிறையை அடைந்த சில மணி நேரங்களில் பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவார்” என்று கூறினார்.

பேரறிவாளானுக்கு ஒரு மாத காலம் பரோல் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.