பெரம்பலூர் அருகே சாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுட்டனர்.
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் அருகே பெரியசாமி மலையில் உள்ள சாமி சிலைகளை கடந்த 6 தேதி மர்ம நபர்கள் சேதபடுத்தி சென்றனர். அதனைத் தொடர்ந்து நேற்றிரவு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய மற்றொரு கோவிலிலும் சாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலைமறியலால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.