பொதுமக்கள் புதியதலைமுறை
தமிழ்நாடு

பணவீக்கம் | விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மக்கள் கூறும் யோசனைகள் என்ன?

விலைவாசி உயர்வை குறிக்கும் பணவீக்கம் அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில் எதிர்வரும் பட்ஜெட்டில் அதனை கட்டுப்படுத்த அறிவிப்புகள் வேண்டும் எனக்கோரிக்கை விடுக்கின்றனர் பொதுமக்கள்.

Jayashree A

விலைவாசி உயர்வை குறிக்கும் பணவீக்கம் அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில் எதிர்வரும் பட்ஜெட்டில் அதனை கட்டுப்படுத்த அறிவிப்புகள் வேண்டும் எனக்கோரிக்கை விடுக்கின்றனர் பொதுமக்கள்.

இந்நிலையில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மக்கள் கூறும் யோசனைகள் என்ன?

"10 ஆண்டுகளுக்கு முன் அரிசி ஒரு கிலோ ரூ.20 தற்போது ரூ.70ஆக உயர்வு சம்பளம் ரூ.10,000-லிருந்து 12,000ஆக மட்டுமே உயர்ந்திருக்கிறது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்" என்கிறார் பெண் ஒருவர்

"சொந்த ஊரிலேயே ஹோட்டல் தொழில் செய்து வந்தேன். மளிகைப் பொருட்கள் விலை உயர்வால் ஹோட்டலை மூடிவிட்டேன் வாழ்வாதாரத்திற்காக தற்போது வேலைக்குச் செல்கிறேன்"என்கிறார் ஒருவர்

"தினக்கூலியாக ரூ.200 கிடைக்கிறது; அரிசி விலை ரூ.70ஆக உள்ளது" எப்படி வாங்குவது? வருமானம் அதிகரிக்க வேண்டும் விலைவாசி குறைய வேண்டும் அடிப்படை வாழ்வாதாரத்தை அப்போது தான் நகர்த்த முடியும்" என்கிறார் நடுதரவர்க்க பெண்மணி

"தேவையற்ற செலவை அரசு குறைக்க வேண்டும். பணத்தின் மதிப்பு அப்போதுதான் அதிகரிக்கும் .பணவீக்கம் குறையும். உள்நாட்டு தேவையை பாதிக்காத வகையில் ஏற்றுமதி செய்ய வேண்டும்" என்கிறார் திண்டுக்கல் அரசு கல்லூரி பேராசிரியர் கார்த்தியாயினி,.