கொரோனாவால் மக்கள் நிலைகுலைந்துள்ளனர்.இந்த நேரத்தில் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை தேவையா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வியெழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “ கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது, மரணங்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்குகிறது. மருத்துவர்கள் மரண எண்ணிக்கையை கூட சரியாக கணக்கிடவில்லை, ஊதியம் தரவில்லை. மக்களோ நிலைகுலைந்துள்ளனர் ஆளும் கட்சியினர் கவலை ஏதுமின்றி முதல்வர் வேட்பாளர் சர்ச்சையில் உள்ளது. நீரோவை மிஞ்சுகிறார்கள்.தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்