தமிழ்நாடு

புத்தகங்களுடன் புத்தாண்டை வரவேற்ற மக்கள்

புத்தகங்களுடன் புத்தாண்டை வரவேற்ற மக்கள்

webteam

புத்தாண்டையொட்டி சென்னையில் பல புத்தகக் கடைகளில் வாசகர்களுக்காக சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

சென்னையில் நள்ளிரவில் புத்தகக் கடைகளில் திரண்ட வாசகர்கள், புத்தகங்களை வாங்கி புத்தாண்டை தொடங்கினர். வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், எழுத்தாளர்கள், கவிஞர்கள் பங்கேற்றனர். வா‌சகர்களுடன் உரையாடிய எழுத்தாளர்கள், புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். மேலும் 10 முதல் 35 சதவிகிதம் வரை தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன. வழக்கமான கொண்டாட்டங்களை தவிர்த்த இளைஞர்களும், பொதுமக்களும் ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.