தமிழ்நாடு

சமூக விலகலை அலட்சியப்படுத்தும் மக்கள் - திணறும் கடலூர் காவல்துறை

webteam

கொரோனா குறித்த விழிப்புணர்வு இல்லாமல் கூட்டம் கூட்டமாகச் சென்று காய்கறிகளை வாங்கும் மக்களை கட்டுப்படுத்த முடியாமல் கடலூர் காவல்துறையினர் திணறுகின்றனர்.


கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைய இருக்கிறது. இந்நிலையில் மேலும் ஊரடங்கை நீட்டிப்பதற்கான அறிவிப்பை பிரதமர் இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டை பொருத்தவரை கொரோனா பாதிப்பானது அதிகரித்த வண்ணமே இருக்கிறது. நேற்றைய நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் சில பகுதிகளில் மக்கள் நிலமையின் வீரியம் புரியாமல் வெளியே சுற்றி வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் தனிமனித இடைவெளியைப் பற்றிச் சிந்திக்காமல் காய்கறிக் கடைகளில் மக்கள் கூட்டமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. மஞ்சக்குப்பம், புதுப்பாளையம் என அனைத்து பகுதிகளிலும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அத்தியாவசியப் பொருட்களை வாங்க வீட்டில் ஒருவர் மட்டுமே வெளியே வரலாம் என காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகமும் அறிவுறுத்திய போதும்,  வாகனங்களில் இருவராகவும், கூட்டமாகமாகவும் வெளியே வருவது கொரோனா பரவலை அதிகரிக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்