பொதுமுடக்க அறிவிப்பால் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள், பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.
கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு நாளை முதல் 14 நாட்களுக்கு முழுமுடக்கத்தை அறிவித்துள்ளது. அதனால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல, தாம்பரத்தை அடுத்துள்ள பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.
மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், பெரும்பாலானோர் பேருந்துகள் கிடைக்காமல் நீண்ட நேரம் காத்திருக்க நேர்ந்தது. அதனால், இன்று கூடுதல் பேருந்துகளை இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.