தமிழ்நாடு

ஆற்றைக் காணோம்: பொதுமக்கள் ஆர்பாட்டம்

ஆற்றைக் காணோம்: பொதுமக்கள் ஆர்பாட்டம்

rajakannan

வடசென்னை எண்ணூர் துறைமுகத்தின் அருகே கொற்றலை ஆற்றில் உள்ள கழிவுகளை அகற்ற வலியுறுத்தி நீரில் இறங்கி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். 

ஆறு எங்கள் உயிர் என்ற அமைப்பின் சார்பில், இந்த மனித சங்கிலி போராட்டத்தை நடத்தப்பட்டது. துறைமுகத்துக்காக ஆயிரம் ஏக்கருக்கு மேல் ஆற்றின் பகுதியை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.‌ மேலும், பழைய வரைபடத்திலிருந்த கொற்றலை ஆற்றை, புதிய வரைபடத்தில் இடம்பெறச் செய்யாமல் வெளியிட்டிருப்பதாகவும் புகார் தெரிவித்தனர். 

கொற்றலை ஆற்றில் மீன் பிடித்து, அதன் மூலம் வருவாய் பெற்று வந்த நிலையில், தற்போது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர். மேலும், அனல் மின் நிலைய சாம்பல் கழிவுகளால் ஆறு முழுவதும் மாசடைந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.