தமிழ்நாடு

மின்கோபுரம் மீதேறி போராடிய பெண்கள்

மின்கோபுரம் மீதேறி போராடிய பெண்கள்

Rasus

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகேயு‌ள்ள குருந்தணி கிராம‌த்தில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பெண்கள் உயர்மின்கோபுரம் மீதேறி‌ போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம் குருந்தணி கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இருப்பினும் கடையைத் திறப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தன. இதையறிந்த கிராம மக்கள், கடை அருகே தி‌ரண்டனர். மேலும், அங்கிருந்த உயர்மின் கோபுரம் மீதேறி போராட்டம் நடத்தினர்.

மின்கோபுரத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் கூறி, பெண்களை கீழே இறங்குமாறு மின்வாரிய ஊழியர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனாலும் போராட்டம் தொடர்ந்ததையொட்டி உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி‌னர். இதன்பின்னர், பெண்கள் உயர்மின் கோபுரத்தில் இருந்து கீழிறங்கினர்.