தமிழ்நாடு

''மீண்டு வா சுர்ஜித்'' - கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்த மாற்றுத்திறனாளிகள்

''மீண்டு வா சுர்ஜித்'' - கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்த மாற்றுத்திறனாளிகள்

webteam

ஆழ்துளை கிணற்றில் சிக்கி இருக்கும் சுர்ஜித் நலமுடன் திரும்ப மதுரையில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இணைந்து கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்தனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை 5.40 மணிக்கு விழுந்த குழந்தை சுர்ஜித் 70 அடிக்கு சென்றுவிட்ட நிலையில் மீட்புப்பணி தொடர்கிறது.

பெற்றோரின் சொந்த இடத்தில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் பொதுமக்கள் சுர்ஜித் நலமுடன் திரும்ப பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள் உள்ளிட்டோர் கண்ணீர் மல்க ''மீண்டு வா சுர்ஜித்'' என பிரார்த்தனை செய்தனர். சுர்ஜித்தின் புகைப்படத்தை கையில் எந்தியும், கையெடுத்து வணங்கியும் கண்ணீர் மல்க அவர்கள் பிரார்த்தனை செய்தனர்.