மாதவரம் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று தீயணைப்புத் துறை டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாதவரம் ரவுண்டானா பகுதியில் உள்ள ரசாயனக் கிடங்கில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு 10 தீயணைப்பு வாகனங்களில் விரைந்துள்ள 50க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திர பாபு பேசியபோது " முதற்கட்டமாக 26 தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.மேலும் 10 தீயணைப்பு வாகனம் வந்து கொண்டு இருக்கிறது.முதற்கட்ட விசாரணையில் இந்த ரசாயனம் விஷத் தன்மை வாய்ந்தது இல்லை. ஆனால் கடுமையாக புகையை ஏற்படுத்த கூடியவை. மக்கள் பதற்றம் அடைய வேண்டாம், இன்னும் 1 மணி நேரத்தில் தீயை அனைப்போம் என நம்புகிறோம்" என்றார்.
தீயை அணைக்க கொளத்தூர் மெட்ரொ நீரேற்று நிலையத்தில் இருந்து தண்ணீர் லாரிகள் நீரை கொண்டு வருகின்றன
தீயணைப்பு வாகனங்களின் திசை மாற்றி வேறு கோணத்தில் நீரை பாய்ச்ச தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு சைலேந்திர பாபு அறிவுறுத்தல். தீ ஏற்பட்டுள்ள மையப்பகுதியில் நீரை பாய்ச்ச 3 ஸ்கை லிப்ட் வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்துள்ளன.