தமிழ்நாடு

பாரம்பரியமிக்க சேவல் சண்டையை நடத்த நீடிக்கும் தடை.. கோரிக்கை வைக்கும் மக்கள்..!

பாரம்பரியமிக்க சேவல் சண்டையை நடத்த நீடிக்கும் தடை.. கோரிக்கை வைக்கும் மக்கள்..!

webteam

பொங்கல் பண்டிகையில் ஜல்லிக்கட்டு நடத்துவதுபோல பாரம்பரியமிக்க சேவல் சண்டை நடத்தப்பட வேண்டும் என்று சேவல் வளர்ப்பாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சேலம் போல பல மாவட்டங்களில் சேவல் சண்டைக்கு தடை நீடிக்கிறது. காரணம் என்ன?

சிங்கத்தின் பிடரியைப் போல் சிலிர்க்கும் சிறகுகளோடு ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் சேவல்களை சண்டைக்காகவே தயார் செய்கிறார்கள். சமபலம் வாய்ந்த இரண்டு சேவல்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்வதையும், தாக்குதலிலிருந்து தப்பிச் செல்வதையும், மல்யுத்தம் போன்ற ஒரு வீர விளையாட்டாகவே சேவல் வளர்ப்பவர்கள் கருதுகின்றனர்.

ஜல்லிக்கட்டு காளைகளைப் போலவே சேவல்களுக்கும் நீச்சல், மசாஜ், சத்தான உணவு வழங்கப்படுகிறது. சேவலை தயார்படுத்துவதை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்கிறார்கள்.

பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக நடைபெற்று வந்த சேவல் சண்டைக்கு அண்மைக்காலமாக அனுமதி மறுக்கப்படுவதாக கூறும் சேவல் வளர்ப்பவர்கள், சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 2014-ஆம் ஆண்டு முதல் சேவல் சண்டை நடத்த மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளதாக வருந்துகிறார்கள். போட்டியாளர்கள் மட்டுமின்றி பெருமளவு பார்வையாளர்கள் கூடுவதால் பாதுகாப்பு காரணங்களை கூறி சேவல் சண்டைக்கு அனுமதி மறுக்கப்படுவதாக கூறுகிறார்கள்.

சேவல் சண்டை நடத்த நீதிமன்றத்தின் மூலம் அனுமதி பெற்று நடத்த வேண்டிய நிலை உள்ளதாகவும், இதனால் அதிக பொருட்செலவு ஏற்படாததால் மாவட்ட நிர்வாகமே அனுமதி வழங்க வேண்டும் என்றும் சேவல் வளர்ப்பவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.