தமிழ்நாடு

நாளை முதல் முழு முடக்கம்: குடும்பம் குடும்பமாக சென்னையை விட்டு வெளியேறும் மக்கள்

நாளை முதல் முழு முடக்கம்: குடும்பம் குடும்பமாக சென்னையை விட்டு வெளியேறும் மக்கள்

webteam

நாளை முதல் முழு முடக்கம் அமல்படுத்தப்படும் நிலையில், பலர் குடும்பம் குடும்பமாக சென்னையைவிட்டு வெளியேறி வருகின்றனர்.

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில், சென்னை பெருநகர காவல் பகுதி மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் சில பகுதிகளில் நாளை முதல் 12 நாட்களுக்கு முதல் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆவடி, போரூர், பூந்தமல்லி, குமனஞ்சாவடி ஆகிய பகுதிகளில் வாடகை வீடுகளில் தங்கி கூலி வேலை செய்து வந்தவர்கள், சொந்த ஊர் நோக்கி குடும்பம் குடும்பாக சென்று வருகின்றனர். லோடு ஆட்டோவில் பொருட்களை ஏற்றிக்கொண்டு சோகத்துடன் நள்ளிரவில் சொந்த ஊர் புறப்பட்டனர்.

நாள்தோறும் 300 ரூபாய் வரை சம்பாதித்த கூலித் தொழிலாளர்கள் பொதுமுடக்கம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துவிட்டனர். வாடகை கூட செலுத்த முடியாத நிலையில், அவர்கள் அனைவரும் நகைகளை விற்று, சொந்த ஊர் நோக்கி புறப்பட்டுள்ளனர்.