(மாதிரிப்படம்)
சென்னையிலிருந்து வேன் மூலம் தூத்துக்குடிச் சென்ற 14 பேரை அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் சேக் உசேன். இவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டிலேயே தங்கி ஓய்வு எடுத்து வருகிறார். இதனை அடுத்து அவரது உடல்நிலை குறித்து விசாரித்து நேரில் பார்ப்பதற்காக சென்னையில் இருந்து உறவினர்கள் 13 பேர் விளாத்திக்குளம் புறப்பட்டு சென்றுள்ளனர்.
வேன் மூலம் டிரைவர் உட்பட 14 பேர் சென்னையில் இருந்து வரும் தகவல் விளாத்திக்குளம் போலீசாருக்கு கிடைத்தது. இதனை அடுத்து விரைந்து சென்ற போலீசார் வேனை தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்தனர்.
மேலும் வேனில் வந்தவர்கள், டிரைவர் உள்பட 14 பேருக்கும் புதூர் மற்றும் விளாத்திக்குளம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் உறவினர்கள் 13 பேரும் அவர்களது உறவினர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர். ஊரடங்கை மீறி வாகனத்தை இயக்கியதால் ஓட்டுநர் யுவராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்