கடற்கரை சீற்றம் PT
தமிழ்நாடு

புயல் எச்சரிக்கையின் ஆபத்தை உணராமல் கடற்கரையில் கூடும் பொதுமக்கள்!

மிக்ஜம் புயல் எச்சரிக்கையின் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசு தெரிவித்திருக்கும் நிலையில், புயல் எச்சரிக்கையின் ஆபத்தை உணராமல் கடற்கரையில் பொதுமக்கள் வருகை தருகின்றனர்.

PT WEB

வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக பொதுமக்களுக்கு அரசு சார்பிலும் காவல்துறை சார்பிலும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

திருவொற்றியூர் கடற்கரையில் கூடும் மக்கள்!

சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, மற்றும் சென்னை சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை திருவொற்றியூர் கடற்பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு இல்லாததால் ஏராளமான பொதுமக்கள் கடற்கரையில் குவிந்து வருகின்றனர். ஆபத்தை உணராமல் குடும்பத்துடன் குழந்தைகளோடு கடற்கரையில் வந்து கடற்கரையை ரசித்து வருகின்றனர்.

கடல் சீற்றம்

புயலின் தாக்கத்தால் கடல் சீற்றம் அதிகமாகும் நிலையில் உள்ளது. இந்நிலையில் பேராபத்து ஏற்படுவதற்கு முன்பாக காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பார்களா என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.